உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கணவர் மாயம் மனைவி புகார்

கணவர் மாயம் மனைவி புகார்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கணவரைக் காணவில்லை என மனைவி, போலீசில் புகார் அளித்துள்ளாார். கள்ளக்குறிச்சி, அடுத்த பெருவங்கூரைச் சேர்ந்தவர் ராமசாமி, 45; இவர், கடந்த 19ம் தேதி அதே ஊரில் உள்ள இ-சேவை மையத்திற்குச் சென்றார். நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால், அவரது குடும்பத்தினர் சந்தேகமடைந்து பல்வேறு இடங்களில் தேடினர். எங்கும் கிடைக்கவில்லை. அவரது மனைவி சங்கீதா அளித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி