மேலும் செய்திகள்
த.வெ.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
08-Dec-2025
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் சட்டசபை தொகுதி ஐ.ஜே.கே., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. சந்தப்பேட்டை தனியார் திருமண மண்டபத்தில் நடந்த கூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் காமராஜ், மாவட்ட செயலாளர் ராஜேஷ்குமார் வரவேற்றனர். மாநில துணைப்பொதுச்செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கி துவக்கவுரையாற்றினார். ஐ.ஜே.கே., நிறுவன தலைவர் பாரிவேந்தர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, எதிர்வரும் தேர்தலை சிறப்பான வகையில் எதிர்கொள்வது குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். மாநில பொதுச்செயலாளர் சண்முகம், மாநில இளைஞரணி அமைப்புச் செயலாளர் அறிவழகன், மாவட்ட கவுரவ தலைவர் சுனில்குமார், ரிஷிவந்தியம் தொகுதி தலைவர் பொன்முடி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாநில இலக்கிய அணி செயலாளர் சிதம்பரநாதன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். திருக்கோவிலுாரில் பிறந்த ராஜராஜ சோழனுக்கு வெங்கல சிலை அமைக்க வேண்டும், திருக்கோவிலுாரை விழுப்புரம் மாவட்டத்துடன் சேர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட ஒன்பது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் திருக்கோவிலுார் தொகுதி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். மாவட்ட மகளிர் அணி செயலாளர் தேவி நன்றி கூறினார்.
08-Dec-2025