உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / நாய் தொல்லை அதிகரிப்பு: சங்கராபுரம் மக்கள் அச்சம்

நாய் தொல்லை அதிகரிப்பு: சங்கராபுரம் மக்கள் அச்சம்

சங்கராபுரம் : சங்கராபுரத்தில் அதிகரித்து வரும் தெரு நாய் தொல்லையால் மக்கள் அச்சப்படுகின்றனர்.சங்கராபுரம் பேருராட்சியில், தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. பகல் மற்றும் இரவு நேரங்களில் சாலையில் நடந்து செல்வோரை கூட்டம், கூட்டமாக துரத்துகிறது. இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அச்சமடைகின்றனர். நேற்று முன்தினம், சங்கராபுரம் பொய்குனம் சாலையில் முனுசாமி என்பவரின் 3 மாத கன்று குட்டியை தெரு நாய் கடித்து குதறியது.இதேபோன்று, கடந்த வாரம் காட்டுவனஞ்சூர் காலனியில் வீட்டின் முன் கட்டியிருந்த பிறந்த சில நாட்களே ஆன இரண்டு ஆட்டு குட்டிகளை தெரு நாய்கள் கடித்ததால் இறந்தன. இப்படி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நாய் தொல்லையால் சங்கராபுரம் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.எனவே, தெரு நாய்களை கட்டுப்படுத்த பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி