மேலும் செய்திகள்
சுதந்திர தின விழா
15-Aug-2025
உளுந்துார்பேட்டை; உளுந்துார்பேட்டை சாரதா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா நடந்தது. தாளாளர் ஆத்மா விகாச ப்ரியா அம்பா தலைமை தாங்கினார். ஜிப்மர் பேராசிரியர் சதீஷ்குமார் கமலநாதன், உதவி பேராசிரியர் சந்தியா செல்வராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாககலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றி வைத்தனர். பின்னர் மாணவர்களுக்கு சான்றிதழ், பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினர். பள்ளி இயக்குனர் யாக்ன ப்ரானா மாஜி, பள்ளி முதல்வர் சந்திரா, ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
15-Aug-2025