இந்திய கம்யூ., ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் இந்திய கம்யூ., சார்பில் கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்திய கம்யூ., மாவட்ட செயலாளர் ராமசாமி தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர்கள் சுப்ரமணியன், அப்பாவு, பொருளாளர் கலியபெருமாள் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் வீரபாண்டியன் கண்டன உரையாற்றினர். உச்சநீதிமன்ற நீதிபதி கலாய் மீது காலணி வீசிய வழக்கறிஞரை உடனடியாக இடைநீக்கம் செய்வதுடன், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. விவசாய சங்க மாவட்ட தலைவர் கஜேந்திரன், இடைக்குழு செயலாளர்கள் ரவி, தேவேந்திரன், செந்தில், மதியழகன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.