உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சின்னசேலத்தில் இந்திய கம்யூ., ஆர்ப்பாட்டம்

சின்னசேலத்தில் இந்திய கம்யூ., ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி : சின்னசேலத்தில் இந்திய கம்யூ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.சின்னசேலம் பி.டி.ஓ., அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயலாளர் மாரியப்பன் தலைமை தாங்கினார். வட்ட நிர்வாகிகள் சுப்பிரமணியன், பெரியசாமி, மாரிமுத்து முன்னிலை வகித்தனர். மகாத்மா காந்தி 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை செய்த தொழிலாளர்களுக்கு கடந்த 4 மாதங்களாக கூலித்தொகை வழங்கப்படாமல் உள்ளது.எனவே, கூலித்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் மற்றும் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், நிர்வாகிகள் பழனி, சன்னியாசி, ஆனந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, பி.டி.ஓ., அலுவலகத்தில் உள்ள அலுவலர்களிடம் மனு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ