மேலும் செய்திகள்
இளம்பெண் மாயம் : போலீசார் விசாரணை
04-Nov-2025
ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சி
04-Nov-2025
வாகனம் மோதி மூதாட்டி பலி
04-Nov-2025
அக்ராயபாளையம் கோவில் கும்பாபிஷேகம்
04-Nov-2025
திருக்கோவிலுார், : விழுப்புரம் லோக்சபா தொகுதிக்குட்பட்ட திருக் கோவிலுார் சட்டசபை தொகுதி தேர்தல் ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் பழனி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.விழுப்புரம் லோக்சபா தொகுதிக்குட்பட்ட, திருக்கோவிலுார் சட்டசபை தொகுதி தேர்தல் ஏற்பாடுகளை திருக்கோவிலுார் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆர்.டி.ஓ., கண்ணன் செய்து வருகிறார். நேற்று விழுப்புரம் லோக்சபா தொகுதி தேர்தல் அதிகாரி, கலெக்டர் பழனி திருக்கோவிலுார் தாலுகா அலுவலகத்தில் ஓட்டுப்பெட்டி வைக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு அறையை பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.அப்போது, ஓட்டுச்சாவடி மையங்களின் எண்ணிக்கை, வாக்காளர்களின் எண்ணிக்கை விபரம், பதற்றமான ஓட்டுச்சாவடி விபரம், அங்கு மேற்கொள் ளப்பட்டிருக்கும் பாதுகாப்பு பணிகள், ஓட்டுச்சாவடியில் வசதிகள், தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்டிப்பாக, நேர்மையுடன் பின்பற்றுவது குறித்து ஆலோசனை வழங்கினார்.ஆர்.டி.ஓ., தாசில்தார் மாரியாபிள்ளை, டி.எஸ்.பி., மனோஜ்குமார், நகராட்சி கமிஷனர் கீதா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
04-Nov-2025
04-Nov-2025
04-Nov-2025
04-Nov-2025