உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / இலங்கை தமிழர் குடியிருப்பில் ஆய்வு

இலங்கை தமிழர் குடியிருப்பில் ஆய்வு

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் 5.7 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 88 புதிய வீடுகளை அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு துறை ஆணையர் ஆய்வு செய்தார். சின்னசேலம் பகுதியில் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள பழைய கட்டங்களுக்கு பதிலாக புதிய குடியிருப்புகள் அமைத்திட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டதையடுத்து, 5 கோடியே 7 லட்சம் ரூபாய் மதிப்பில் 88 புதிய வீடுகள் கட்டப்பட்டுள்ளன. முகாமில் புதிதாக கட்டப்பட்டுள்ள வீடுகளை கலெக்டர் பிரசாந்த் முன்னிலையில், சமூக சீர்த்திருத்த துறை அரசு செயலர் மற்றும் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு துணை ஆணையர் வள்ளலார் நேற்று ஆய்வு செய்தார். அதில் சாலை மற்றும் குடிநீர் இணைப்பு வசதிகள் மற்றும் குடியிருப்புகளை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து அலுவலர்களுடன் கேட்டறிந்து ஆலோசனை செய்தார். மேலும் முகாமில் உள்ள அடிப்படை வசதிகள், வழங்கப்படும் உணவு, குடிநீர் உள்ளிட்டவை குறித்து முகாம் வாழ் தமிழர்களிடம் கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து மீதமுள்ள பணிகளை விரைந்து முடித்து இலங்கை தமிழர்களுக்கு வீடுகளை ஒதுக்கீடு செய்ய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின்போது டி.ஆர்.ஓ., ஜீவா, ஆர்.டி.ஓ., முருகன் மற்றும் வருவாய் துறை, பேரூராட்சி துறை, ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ