உயிர் வாழ்க்கை சான்று சமர்ப்பிக்க அறிவுறுத்தல்
கள்ளக்குறிச்சி : மாற்றுத் திறனாளிகள் பராமரிப்பு உதவித் தொகை பெற உயிர் வாழ்க்கை சான்று சமர்ப்பிக்க கலெக்டர் பிரசாந்த் அறிவுறுத்தியுள்ளார்.அவரது செய்திக்குறிப்பு:மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மூலம் மனவளர்ச்சி குன்றிய, தசைச் சிதைவு நோயால் பாதித்த மற்றும் தொழுநோயால் பாதித்து குணமடைந்தவர்கள், முதுகு தண்டுவடம் பாதித்தவர்களுக்கு பராமரிப்பு உதவித் தொகை மாதம் 2,000 ரூபாய் வழங்கப்படுகிறது. 2025-26ம் ஆண்டிற்கான உதவித் தொகைக்கு, உயிர் வாழ்க்கை சான்று என்ற வருடாந்திர சான்று வி.ஏ.ஓ., விடம் பெற்று ரேஷன், ஆதார் கார்டு, மாற்றுத்திறனாளிளுக்கான தேசிய அடையாள அட்டை, யூ.டி.ஐ.டி., அட்டை மற்றும் வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றின் நகலுடன் வரும் 31ம் தேதிக்குள் மாற்றுத்திறனாளிகளின் பாதுகாவலர் மட்டும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம்.