மேலும் செய்திகள்
ரேஷன் கடை விற்பனையாளர் பணிக்கு நேர்முக தேர்வு
18-Nov-2024
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரேஷன் கடை விற்பனையாளர் பணியிடத்திற்கு விண்ணப்பித்தவர்களுக்கு வரும் 25ம் தேதி நேர்காணல் நடக்கிறது.கள்ளக்குறிச்சி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் கட்டுப்பாட்டில் செயல்படும் ரேஷன் கடைகளில் 70 விற்பனையாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது. காலி பணியிடத்தை நிரப்புவதற்காக, மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் மூலம் கடந்த அக்., 9ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. தொடர்ந்து தகுதி வாய்ந்த நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தனர். கடந்த 7ம் தேதியுடன் விண்ணப்பிக்க கால அவகாசம் முடிந்தது.மாவட்டத்தில் காலியாக உள்ள 70 விற்பனையாளர் பணியிடத்திற்கு 5,095 நபர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதில், உரிய படிவங்களை இணைக்காதது, தகுதி இல்லாதது உட்பட பல்வேறு காரணங்களால் 100க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. மீதமுள்ள விண்ணப்பதாரர்களுக்கு வரும் 25ம் தேதியில் இருந்து 30ம் தேதி வரை கள்ளக்குறிச்சி வேளாண்மை கூட்டுறவு விற்பனையாளர் சங்க வளாகத்தில் நேர்காணல் நடந்தது. விண்ணப்பதாரர்கள் தங்களது ஹால் டிக்கெட்டினை https://www.drbkak.inஎன்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
18-Nov-2024