உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பஸ் கண்ணாடிகள் உடைத்த கண்டக்டர் மீது விசாரணை

பஸ் கண்ணாடிகள் உடைத்த கண்டக்டர் மீது விசாரணை

திருக்கோவிலுார்:மணம்பூண்டி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பஸ் கண்ணாடிகளை உடைத்த கண்டக்டர் மீது போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மணம்பூண்டி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் திருக்கோவிலூர் - சென்னை வழித்தடத்தில் கண்டக்டராக பணியாற்றுபவர் சு.பில்ராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணியன் மகன் கார்த்திகேயன், 32; இவர் நேற்று மாலை 3:30 மணிக்கு, குடிபோதையில் பணிமனை வளாகத்தில் இருந்த இரண்டு பஸ்களின் முன்பக்க கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினார். இது குறித்து கேட்ட பணிமனை மேலாளர் நாராயணமூர்த்தியை மிரட்டினார். இது குறித்த புகாரின் பேரில், அரகண்டநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை