உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சியில் சேர அழைப்பு

முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சியில் சேர அழைப்பு

கள்ளக்குறிச்சி : விழுப்புரம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுவதாக கள்ளக்குறிச்சி கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் தெரிவித்துள்ளார்.அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு :விழுப்புரம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், 2025-26ம் ஆண்டு முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கான சேர்க்கை நடக்கிறது. ஓராண்ட கால பயிற்சி, இரண்டு பருவ முறைகளை கொண்டது.இந்த பயிற்சிக்கு, 10, பிளஸ் 2 மற்றும் பட்டயப்படிப்பு தேர்ச்சி பெற்ற, 17 வயதுக்கு மேற்பட்டோர் விண்ணப்பிக்கலாம். அதிகபட்ச வயது வரம்பு இல்லை. விருப்பமுள்ளவர்கள் www.tncu.tn.gov.inஎன்ற இணையதளத்தின் மூலம், வரும் 20ம் தேதி மாலை 5:00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். நேரடியாகவும், தபால் மூலமாகவும் விண்ணப்பிக்க கூடாது. பயிற்சிக்கான தேர்வினை தமிழில் மட்டுமே எழுத வேண்டும்.பயிற்சியில் சேரும் போது, ரூ.20,750 கட்டணத்தை ஒரே தவணையில் இணைய வழி மூலமாக செலுத்த வேண்டும். மேலும் விபரங்களை விழுப்புரம் கூட்டுறவு மேலாண்மை நிலையம், நெ.2/1006, எல்லீஸ் சத்திரம் சாலை, திருச்சி நெடுஞ்சலை, வழுதரெட்டி, விழுப்புரம் - 605 401 என்ற முகவரியில் உள்ள அலுவலகத்திற்கு நேரில் சென்றும், முதல்வரை 94425 63330 மொபைல் எண்; மற்றும் 04142 222619 அலுவலக எண், ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி