உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ராமர் கோவில் கும்பாபிஷேக விழா அழைப்பிதழ் வழங்கல்

ராமர் கோவில் கும்பாபிஷேக விழா அழைப்பிதழ் வழங்கல்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் பா.ஜ., சார்பில் வீடுகள்தோறும் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா அழைப்பிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.வரும் 22ம் தேதி அயோத்தியில் ராம ஜென்ம பூமியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடக்க இருக்கிறது. அதற்கான அட்சதை அரிசி, ராமர் சுவாமி படத்துடன் கூடிய அழைப்பிதழ் நாடு முழுவதும் பகுதி வாரியாக பிரித்து வழங்கப்பட்டு வருகிறது.கள்ளக்குறிச்சி நகர பகுதியில் ஒவ்வொரு வீட்டிற்கும் நேரில் சென்று அழைப்பிதழ் வழங்கும் பணியை பா.ஜ., சார்பில் மாநில ஓ.பி.சி., அணி பொது செயலாளர் ராஜ்குமார் துவக்கினார். பஜனை கோஷ்டியினருடன் இணைந்து வீடுகள் தோறும் அழைப்பிதழ் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ