உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தலைமை ஆசிரியருக்கு நற்சான்றிதழ் வழங்கல்

தலைமை ஆசிரியருக்கு நற்சான்றிதழ் வழங்கல்

கள்ளக்குறிச்சி, : கள்ளக்குறிச்சியில் நடந்த குடியரசு தின விழா நிகழ்ச்சியில் செங்குறிச்சி அரசு பள்ளி தலைமை ஆசிரியருக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் குடியரசு தினவிழா நேற்று முன்தினம் நடந்தது. கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்து, போலீசாரின் அணிவகுப்பை பார்வையிட்டார். தொடர்ந்து மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த 47 துறைகளை சேர்ந்த 174 அரசு அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. அதில், உளுந்துார்பேட்டை அடுத்த செங்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அன்பழகனுக்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் நற்சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை