உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அ.தி.மு.க., பொது செயலாளரிடம் ஜெ., பேரவை நிர்வாகிகள் வாழ்த்து

அ.தி.மு.க., பொது செயலாளரிடம் ஜெ., பேரவை நிர்வாகிகள் வாழ்த்து

கள்ளக்குறிச்சி: உளுந்துார்பேட்டைக்கு வந்த அ.தி.மு.க., பொதுச் செயலாளரிடம் ஜெ., பேரவை நிர்வாகிகள் வாழ்த்து பெற்றனர். உளுந்துார்பேட்டையில் திருமலா திருப்பதி வெங்கடேஸ்வரா கோவில் வளாகத்தில் அன்னதான கூடம் பூமி பூஜை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதியதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளை சந்திப்பதற்கு அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி வந்தார். அப்போது மாவட்ட செயலாளர் குமரகுரு தலைமையில் ஜெ., பேரவை செயலாளர் ஞானவேல் உள்ளிட்ட பேரவை புதிய நிர்வாகிகள் பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு மலர்மாலை மற்றும் பணமாலை அணிவித்து வாழ்த்து பெற்றனர். இதில் செந்தில்குமார் எம்.எல்.ஏ., ஜெ., பேரவை தலைவர் தமிழ்செல்வன், பொருளாளர் அருள்மணி, இணை செயலாளர்கள் சுபாஷ், அசோகன், மதியழகன், டைகர்பாபு, முருகன்நடராஜன், வெங்கட், துணை செயலாளர்கள் வெங்கடேசன், குரு, ஆகாஷ்துரை, கோவிந்தன், ராமு, ஒன்றிய பேரவை செயலாளர்கள் கதிரவன், மணிகண்டன், மஞ்சமுத்து, குட்டி, ஜெயசந்திரன், சண்முகம், வைத்தியநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை