கள்ளக்குறிச்சியில் ஜாக்டோ ஜியோ கூட்டம்
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் ஜாக்டோ ஜியோ சார்பில் மாவட்ட அளவிலான கூட்டம் நடந்தது. கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்த கூட்டத்திற்கு, தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ரமேஷ், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஆனந்தகிருஷ்ணன், பதவி உயர்வுபெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் அனந்தகிருஷ்ணன், இடைநிலை பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர் மன்ற மாநில அமைப்பு செயலாளர் அண்ணாதுரை தலைமை தாங்கினர். ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகள் ஏழுமலை, சவரிமுத்து, சம்சுதீன், மனோகர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர்கள் செல்வராஜ், ரஹீம், செல்வராஜ், அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் மகாலிங்கம், குமரன் சிறப்புரையாற்றினர். ஜாக்டோ ஜியோ மாநில முடிவின்படி பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இடைநிலை, முதுநிலை, உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர், ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி வரும் 8ம் தேதி கலெக்டர் அலுவலகம் முன் பெருந்திரள் முறையீடு செய்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.