உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஜாக்டோ-ஜியோ ஆர்ப்பாட்டம்

ஜாக்டோ-ஜியோ ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் எதிரே கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கள்ளக்குறிச்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் அனந்தகிருஷ்ணன், சங்க நிர்வாகிகள் ஆனந்தகிருஷ்ணன், அண்ணாதுரை முன்னிலை வகித்தனர். தமிழக தமிழாசிரியர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம், மாநில ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணை பொதுச்செயலாளர் மகாலிங்கம், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணைத்தலைவர் ரஹீம் ஆகியோர் கோரிக்கை வலியுறுத்தி சிறப்புரையாற்றினர். பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துதல், ஆசிரியர் துறையில் உள்ள ஊதிய முரண்பாடுகளை களைத்தல், அனைத்து துறைகளிலும் உள்ள காலி பணியிடங்களை நிரப்புதல் உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு அரசு பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ேஷக்ஜாகிர்உசேன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ