உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / திருக்கோவிலுாரில் 12ம் தேதி ஜமாபந்தி

திருக்கோவிலுாரில் 12ம் தேதி ஜமாபந்தி

திருக்கோவிலுார், ; ஜமாபந்தி எனப்படும் வருவாய் தீர்வாயம் திருக்கோவிலுார் தாலுகாவில் வரும் 12ம் தேதி துவங்குகிறது.திருக்கோவிலுார் தாலுகாவிற்கான ஜமாபந்தி எனப்படும் வருவாய் தீர்வாய கூட்டம், சப்-கலெக்டர் ஆனந்த்குமார் சிங் தலைமையில், தாலுகா அலுவலக வளாகத்தில் வரும் 12ம் தேதி துவங்குகிறது. தாசில்தார் ராமகிருஷ்ணன் முன்னிலை வகிக்கிறார்.முதல் நாள் நிகழ்ச்சியாக காலை 10:00 மணிக்கு ஆவியூர் கொளப்பாக்கம் குறுவட்டத்திற்கு உட்பட்ட கிராம கணக்குகள் சரிபார்ப்பு மற்றும் பொதுமக்களிடம் மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து 13, 14ம் தேதிகளில் திருப்பாலபந்தல் குறுவட்டம், 15ம் தேதி குலதீபமங்கலம் குறுவட்டத்திற்கும், 16, 19ம் தேதிகளில் திருக்கோவிலுார் குறுவட்டத்திற்கு என மொத்தம் 75 வருவாய் கிராமங்களுக்கு ஜமாபந்தி நடக்கிறது.இதில், நேரடியாக மனு கொடுக்க விரும்பும் கிராம மக்கள், தங்கள் குறுவட்ட வருவாய் தீர்வாய முகாம் நடைபெறும் நாட்களில் நேரில் மனுக்களை கொடுக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை