உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே, வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.திருக்கோவிலுார் அடுத்த திம்மச்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அப்பாதுரை மகன் கோவிந்தன், 40; இவர் குடும்பத்துடன் பெங்களூரில் கூலி வேலை செய்து வருகிறார்.கடந்த, 22ம் தேதி காலையில் இவரது வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு, பொருட்களை சிதறி கிடந்ததை அவரது உறவினர்கள் பார்த்தனர். இது குறித்து கோவிந்தனுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர் வீட்டிற்கு வந்து பார்த்த போது,பீரோவில் இருந்த 4 சவரன் நகை மற்றும் ரூ. 40 ஆயிரம் திருடு போனது தெரிந்தது.இது குறித்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி