பஸ்சில் மூதாட்டியிடம் நகை திருட்டு
திருக்கோவிலூர்: திருக்கோவிலுார் அருகே பஸ்ஸில் மூதாட்டியிடம் நகை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.திருக்கோவிலுார் அடுத்த செட்டித்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் உண்ணாமலை, 63; கடந்த 1,ம் தேதி காலை திருக்கோவிலுாருக்கு சென்று மளிகை பொருட்களை வாங்கினார். தொடர்ந்து ரிஷிவந்தியம் செல்லும் அரசு டவுன் பஸ்ஸில் பயணித்து, ஜி.அரியூர் பஸ் நிறுத்தத்தில் இறங்கிய போது, அவர் கழுத்தில் அணிந்திருந்த, 5 சவரன் செயினை காணவில்லை.இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில், திருக்கோவிலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.