உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பூட்டிய வீட்டில் நகை திருட்டு

பூட்டிய வீட்டில் நகை திருட்டு

திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் பூட்டிய வீட்டின் பீரோவை உடைத்து நகை, பணம் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.திருக்கோவிலுார், கீழையூர், வடக்கு வீதியைச் சேர்ந்தவர் சமுத்திரம் மகன் பிரகாஷ், 30; கடந்த 7ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு, சென்னைக்கு சென்றார்.கடந்த 22ம் தேதி காலை வீட்டின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தகவல் தெரிவித்தனர். அவர் வந்து பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்து 3 சவரன் மற்றும் 7 ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டது தெரிந்தது. திருக்கோவிலுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை