உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / முதல்வர் கோப்பைக்கான கபடி, நீச்சல் போட்டி

முதல்வர் கோப்பைக்கான கபடி, நீச்சல் போட்டி

கள்ளக்குறிச்சி : முதல்வர் கோப்பை வி ளையாட்டு போட்டிகளில் நேற்று பள்ளி கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கு கபடி மற்றும் நீச்சல் போட்டிகள் நேற்று நடந்தது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் கடந்த 25ம் தேதி துவங்கியது. இப்போட்டிகள் வரும் 10ம் தேதி வரை நடக்கிறது. இப்போட்டிகள் பள்ளி, கல்லுாரி மாணவ மாணவிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 5 பிரிவுகளின் கீழ் நடக்கிறது. கூடைபந்து, கபடி, கோ-கோ, கால்பந்து உள்ளிட்ட குழு போட்டிகள் மற்றும் ஓட்டபந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட தடகள போட்டிகள் நடக்கின்றன. பள்ளி மாணவிகளுக்கான கபடி மற்றும் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான நீச்சல் போட்டி நேற்று நடந்தது. இதில் கபடி போட்டி கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி ஆர்.கே.எஸ்., கல்லுாரியிலும், நீச்சல் போட்டி தச்சூர் பாரதி ஆக்ஸாலிஸ் பள்ளியிலும் நடந்தது. போட்டிகளில் 20க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லுாரியை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சுரேஷ்குமார், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் செல்வகுமார் போட்டிகளை கண்காணித்தனர். போட்டிகளில் முதலிடம் பிடித்து வெற்றி பெறுவோருக்கு ரூ.3 ஆயிரம், இரண்டாமிடம் ரூ.2 ஆயிரம், மூன்றாமிடத்திற்கு ஆயிரம் ரூபாய் என பரிசுத் தொகை அவர்களது வங்கி கணக்கிற்கு செலுத்தப்படுகின்றன. மேலும் முதலி டம் பிடிப்போர் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ