மேலும் செய்திகள்
ரிஷிவந்தியத்தில் முப்பெரும் விழா
25-Nov-2024
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் கல்லை தமிழ்ச் சங்க இலக்கிய தொடர் சொற்பொழிவு நடந்தது.நிகழ்ச்சிக்கு சங்க தலைவர் புகழேந்தி தலைமை தாங்கினார். தியாகதுருகம் தமிழ் சங்க தலைவர் ராதாகிருஷ்ணன், சங்கராபுரம் சமூக நல தொண்டர் குசேலன், ஊத்தாங்கால் நல்லாசிரியர் கோவிந்தராஜ், கள்ளக்குறிச்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் முருகன் முன்னிலை வகித்தனர். செயலாளர் மதிவாணன் வரவேற்றார்.பள்ளி மாணவர் தமிழமுதன் திருக்குறள் அதிகாரங்களை மனப்பாடமாக ஒப்புவித்தார்.புலவர்கள் வரதராஜன், மகேந்திரன், அருள்ஞானம், நடேசன் ஆகியோர் தமிழ்ச் சங்க இலக்கிய தொடர் சொற்பொழிவாற்றினர்.குறிஞ்சிப்பாடி தமிழ்ச் சங்க தலைவர் ஞான வைத்தியநாதன் படத்தை கல்லை தமிழ்ச் சங்க சிறப்பு தலைவர் கோமுகி மணியன் திறந்து வைத்தார்.தொடர்ந்து ஆராவமுதன் தலைமையில் கவியரங்கம் நடந்தது. ஜெயராமன், லட்சுமிபதி, அம்பேத்கர், முத்தமிழ் முத்தன், கதிர்வேல், அறிவழகன் உட்பட பலர் பங்கேற்றனர்.
25-Nov-2024