உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / விதிமீறி கட்டப்படும் கட்டடங்கள் கள்ளக்குறிச்சி கலெக்டர் எச்சரிக்கை கலெக்டர் எச்சரிக்கை

விதிமீறி கட்டப்படும் கட்டடங்கள் கள்ளக்குறிச்சி கலெக்டர் எச்சரிக்கை கலெக்டர் எச்சரிக்கை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விதிகளை பின்பற்றி உரிய அனுமதியுடன் கட்டிடங்கள் கட்ட வேண்டும். இது தொடர்பாக கலெக்டர் பிரசாந்த் விடுத்துள்ள செய்திகுறிப்பு; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கட்டுமானங்களை கட்டுபடுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் பல்வேறு நிலைகளில் சிறு, பெரு குடியிருப்பு, வணிக மற்றும் நிறுவன கட்டடங்கள் அனுமதியின்றியும், அனுமதிக்கு மாறாகவும் கட்டப்படுகின்றன. தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டட விதிகளின் படி, ஒவ்வொரு கட்டட பயன்பாட்டிற்கேற்ப விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. குடியிருப்பு, வணிக கட்டம், கல்வி நிறுவனம், திருமண மண்டபம், தியேட்டர் கட்டடம் உள்ளிட்ட அனைத்து கட்டடங்களுக்கும் விதிகளின்படி உள்ளாட்சி அமைப்பு, நகர் ஊரமைப்பு துறை, மாவட்ட நகர் ஊரமைப்பு துறையில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விதிகளுக்கு மாறாக கட்டடம் அமைத்தால் நடவடிக்கை மேற்கொள்ள உள்ளாட்சி அமைப்பு, நகர் ஊரமைப்பு துறைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. கட்டடங்களுக்கு சீல் வைப்பது முதல் இடித்து அகற்றும் நடவடிக்கை வரை மேற்கொள்ளப்படும். எனவே, பொதுமக்கள் உரிய விதிகளை பின்பற்றி கட்டுமானங்களை கட்ட வேணடும். கட்டடங்களுக்கான அனுமதி பெறும் முறைகள், பின்பற்ற வேண்டிய விதிகள் குறித்து www.onlineppa.tn.gov.inஇணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி