உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கள்ளக்குறிச்சி ஒன்றிய அ.தி.மு.க., அணி நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகியிடம் வாழ்த்து

கள்ளக்குறிச்சி ஒன்றிய அ.தி.மு.க., அணி நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகியிடம் வாழ்த்து

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி தெற்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பு அணி செயலாளர்கள் மாவட்ட செயலாளரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். கள்ளக்குறிச்சி தெற்கு ஒன்றிய அ.தி.மு.க.,வில், மாவட்ட செயலாளர் குமரகுரு பரிந்துரையின் பேரில் சார்பு அணி செயலாளர்களை நியமனம் செய்து, அக்கட்சி பொதுச் செயலாளர் பழனிசாமி அறிவித்துள்ளார். அதன்படி, ஒன்றிய எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளராக வரதன், ஜெ., பேரவை செயலாளராக கஜேந்திர மணி, எம்.ஜி.ஆர்., மன்ற இளைஞரணி செயலாளராக சுரேஷ், மாணவரணி செயலாளராக ராஜவேல், அண்ணா தொழிற்சங்க செயலாளராக நாராயணன், விவசாய அணி செயலாளராக முருகன், மீனவர் அணி செயலாளராக வையாபுரி நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் இலக்கிய அணி செயலாளராக ரவிக்குமார், ஒன்றிய அமைப்பு சாரா ஓட்டு அணி செயலாளராக தனபாண்டி, இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறை செயலாளராக ராமன், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளராக மணிகண்டன், வர்த்தக அணி செயலாளராக ராஜா, கலை பிரிவு செயலாளராக சாமிதுரை, சிறுபான்மை பிரிவு செயலாளராக சாதிக்பாஷா, மகளிர் அணி செயலாளராக விஜயநிர்மலா ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.தொடர்ந்து, கள்ளக்குறிச்சி தெற்கு ஒன்றிய செயலாளர் தேவேந்திரன் தலைமையில் புதிய சார்பு அணி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் உளுந்துார்பேட்டையில், மாவட்ட செயலாளர் குமரகுருவை சந்தித்து மாலை அணிவித்து வாழ்த்து பெற்றனர். நிகழ்ச்சியில் மாவட்ட எம்.ஜி.ஆர்.,இளைஞரணி செயலாளர் ராஜீவ்காந்தி உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை