மேலும் செய்திகள்
கனியாமூர் சக்தி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை
09-May-2025
கள்ளக்குறிச்சி: கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 1 பொதுத்தேர்வில் மாநில அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளது. சின்னசேலம் அடுத்த கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் வெற்றிவேல் பிளஸ் 1 பொதுத்தேர்வில், 594 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடமும், மாநில அளவில் சிறப்பிடமும் பெற்றுள்ளார். பாடவாரியாக தமிழ் 98, ஆங்கிலம் 98, இயற்பியல் 100, வேதியியல் 100, உயிரியல் 100, கணிதம் 98 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். அதேபோல மாணவிகள் பூஜா, பவித்ரா ஆகியோர், 578 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் இரண்டாமிடமும், வைஷ்ணவி 577 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும் பெற்றுள்ளனர். மேலும், மாணவர் வெற்றிவேல் 3 பாடங்களிலும், பூஜா 2 பாடங்களிலும், கணியமுதன், விஜயலஷ்மி, காயத்ரி, ஜனனி ஆகியோர் தலா 1 பாடங்களிலும் 'சென்டம்' பெற்றனர். இந்தாண்டு தேர்ச்சி, 100 சதவீதம் ஆகும். பள்ளி நிறுவனர் பார்வதியம்மாள், சேர்மன் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, நிர்வாக இயக்குநர் சக்தி ரவிக்குமார், முதல்வர் பிரகாஷ் ஆகியோர் மாணவர் வெற்றிவேலை பாராட்டி, சால்வை அணிவித்து கோப்பை வழங்கி கவுரவித்தனர்.
09-May-2025