உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / உங்கள் உரிமைகள் அறிந்து கொள்ளும் திட்டம் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி

உங்கள் உரிமைகள் அறிந்து கொள்ளும் திட்டம் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அடுத்த புதுப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் உங்கள் உரிமைகள் அறிந்து கொள்ளும் திட்டம் குறித்த சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் மதியழகன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். தனலட்சுமி பல்கலைக்கழக சட்டக் கல்லுாரி மாணவர்கள் மூலம் அரசியல் அமைப்பு சட்டம், சரத்துக்கள் உரிமைகள், கடமைகள், போக்சோ குறித்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், இன்றைய கால கட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் கட்டாயம் அறிந்திருக்க வேண்டிய குழந்தைகள் பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் சட்டம் குறித்து விரிவாக விளக்கப்பட்டது. சட்டக் கல்லுாரி மாணவர்கள் தங்களின் விளக்க உரைகள் மூலம் பள்ளி மாணவர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளித்து சட்ட அறிவியல் அவசியத்தை வலியுறுத்தினர். விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் திரளான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ