மேலும் செய்திகள்
கோயில்களில் முளைக்கொட்டு உற்ஸவம்
07-Aug-2025
கள்ளக்குறிச்சி; மண்டகப்பாடி கிராமத்தில் கூத்தாண்டவர் கோவில் தேர் திருவிழா நடந்தது. ரிஷிவந்தியம் அடுத்த மண்டகப்பாடி கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவில் தேர்திருவிழா, கடந்த 29ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் இரவு பாரதம் பாடும் நிகழ்ச்சி, சுவாமி வீதியுலாவும் நடந்தது. நேற்று முன்தினம் மதியம் 3:00 மணிக்கு தேர் திருவிழா துவங்கியது. தேரில் வைத்து அலங்கரிக்கப்பட்ட 26 அடி உயரமுள்ள கூத்தாண்டவர் சுவாமியை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர். தேருக்கு முன் திருநங்கைகள் நடனமாடினர். ஊரில் முக்கிய தெருக்கள் வழியாக வலம் வந்து, தேர் நிலையை அடைந்தது. அதைத்தொடர்ந்து, திருநங்கைகள் தாலி அறுக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள், கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
07-Aug-2025