உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கூத்தாண்டவர் கோவில் திருவிழா; 700க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு

கூத்தாண்டவர் கோவில் திருவிழா; 700க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு

கள்ளக்குறிச்சி ; கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழாவிற்காக 700க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.உளுந்துார்பேட்டை அடுத்த கூவாகம் கிராமத்தில் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 29ம் தேதி தொடங்கி, நடந்து வருகிறது.உலக புகழ் பெற்ற இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருநங்கைகள் தாலி கட்டுதல் நிகழ்ச்சி இன்று 13ம் தேதி நடக்கிறது.நிகழ்ச்சியில் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களைச் சேர்ந்த திருநங்கைகளும் பங்கேற்பர். தொடர்ந்து, நாளை 14ம் தேதி தேர்திருவிழா நடக்கிறது.இதையொட்டி, எஸ்.பி., ரஜத்சதுர்வேதி தலைமையில், ஏ.டி.எஸ்.பி.,க்கள் சரவணன், செல்வராஜ் மேற்பார்வையில், 5 டி.எஸ்.பி.,க்கள், 24 இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் உட்பட 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !