உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சின்னசேலத்தில் கும்ப கலச பூஜை

சின்னசேலத்தில் கும்ப கலச பூஜை

சின்னசேலம்; சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் விஜயதசமியை முன்னிட்டு கும்ப கலச பூஜை நடந்தது. சின்னசேலம் கடை வீதியில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று விஜயதசமி முன்னிட்டு மகிலா விபாக் சார்பில் கும்ப கலச பூஜை நடந்தது. நிகழ்ச்சியை முன்னிட்டு மூலவருக்கு 27 வகையான அபிஷேகங்கள் செய்து தங்க கவசங்களால் அலங்காரம் செய்து வைக்கப்பட்டது. மேலும் உற்சவருக்கு கலைவாணி அலங்காரம் செய்து மகா தீபாரதனை நடந்தது. பூஜைகளை முரளி சர்மா செய்து வைத்தார். மகிளா சங்கத் தலைவி மணிமேகலை ரவிந்திரன் தலைமையில் கும்ப கலச பூஜையும், சகஸ்ரநாம அர்ச்சனையும் நடந்தது. இதில் பங்கேற்ற பக்தர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் வாசவி மகிலா சங்க உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ