உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / உர விற்பனையாளர்களுக்கு எல்1 - பி.ஓ.எஸ்., கருவி வழங்கல்

உர விற்பனையாளர்களுக்கு எல்1 - பி.ஓ.எஸ்., கருவி வழங்கல்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க உர விற்பனையாளர்களுக்கு 'எல்1 - பி.ஓ.எஸ்.,' கருவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு, கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். வேளாண் இணை இயக்குநர் சத்தியமூர்த்தி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன், வேளாண் உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) அன்பழகன் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில், மாவட்டத்தில் உள்ள 69 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களின் செயலாளர்கள், உர விற்பனையாளர்களுக்கு புதிய 'எல்1 - பி.ஓ.எஸ்.,' கருவி வழங்கப்பட்டது.தொடர்ந்து, புதிய கருவி குறித்து கலெக்டர் பிரசாந்த் பேசுகையில், 'புதுப்பிக்கப்பட்ட ஆண்ட்ராய்டு தொடு திரைகள் கொண்ட 'எல்-1 பி.ஓ.எஸ்.,' கருவி பயன்படுத்துவதன் மூலம், குறைவான நேரத்தில், சுலபமாக பணிகளை செய்திடலாம். விவசாயிகளின் கே.சி.சி., கடன் அட்டை மூலம் பணப்பரிவர்த்தனை செய்ய முடியும்.ஜி.பி.எஸ்., பொறுத்தப்பட்டுள்ளதால் கருவியின் இருப்பிடத்தை கண்காணிக்க முடியும். இயந்திரம் மூலம் விவசாயிகளுக்கு உரங்கள் வழங்கி, உடனடியாக இருப்பு பதிவேட்டில் கணக்கினை நேர்செய்திடலாம்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை