லான்சன் டொயோட்டா கார் ஷோரூம் திறப்பு விழா
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் லான்சன் டொயோட்டா கார் ஷோரூம் திறப்பு விழா நடந்தது.கள்ளக்குறிச்சி அடுத்த தச்சூரில் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நடந்த விழாவிற்கு, லான்சன் டொயோட்டா இணை மேலாண் இயக்குநர் சிவாங்கா லங்காலிங்கம் தலைமை தாங்கினார்.தலைமை நிர்வாக அதிகாரி லாவண்யா குமரகுரு, முதன்மை துணை தலைவர்கள் சர்வீஸ் பிரிவு ரூபேஷ்சிங், விற்பனை பிரிவு ஷ்யாம்சுந்தர், டொயோட்டா கிர்லாஸ்கர் மோட்டார் தமிழக தலைமை அலுவலர் ரோஹித் கவ்டா முன்னிலை வகித்தனர். புதுச்சேரி மண்டல விற்பனை மேலாளர் வைத்தியநாதன் வரவேற்றார்.சிறப்பு அழைப்பாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., கார் ேஷரூமை திறந்து வைத்தார். மோட்டார் வாகன ஆய்வாளர் மாணிக்கம், தொழிலதிபர்கள் திருநாராயணன், ஜோதிராமலிங்கம், வெற்றி லாட்ஜ் வெற்றிவேல், ரோட்டரி முன்னாள் ஆளுனர் முத்துசாமி, மன்னா மெஸ் ஜெயராஜ் குத்துவிளக்கேற்றி விற்பனையை துவக்கினர். கள்ளக்குறிச்சி கிளை சர்வீஸ் மேலாளர் மிதுன், விற்பனை மேலாளர் வேல்குமரன் வாழ்த்தி பேசினர்.நிகழ்ச்சியில் தி.மு.க., மாவட்ட அவைத் தலைவர் ராமமூர்த்தி, மாவட்ட சேர்மன் புவனேஸ்வரி பெருமாள், மாவட்ட பிரதிநிதி சக்திவேல், தியாகதுருகம் துணைச் சேர்மன் நெடுஞ்செழியன்.பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினர் அசோக்குமார், மாவட்ட பொதுச் செயலாளர் தியாகராஜன், காங்., மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ், ஓய்வு பெற்ற மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை டீன் நேரு.இளைஞரணி தலைவர் தங்கதமிழன், ஜீவன் ஹோண்டா ஜீவன், டாக்சி ஓட்டுநர் சங்க தலைவர் துரைராஜ், தச்சூர் ஊராட்சி தலைவர் துரை, செம்பொற்ஜோதிநாதர் கோவில் நாச்சியப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.