உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தொழுநோய் கண்டறியும் பணி துவக்கம்

தொழுநோய் கண்டறியும் பணி துவக்கம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி நகராட்சி 13 வார்டுகளில் வீடு வீடாக சென்று சுகாதார தன்னார்வலர்கள் மூலம் தொழுநோய் கண்டறியும் பணி நேற்று துவங்கியது. தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் நடக்கும் இப்பணியை நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் கீதா துவக்கி வைத்தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவி, மருத்துவமில்லா மேற்பார்வையாளர் கொளஞ்சியப்பன், சுகாதார ஆய்வாளர்கள் விக்னேஷ்வரன், பாலா, வசந்தன் ஆகியோர் இப்பணியில் ஈடுபடுகின்றனர். வரும் 28ம் தேதி வரை கள்ளக்குறிச்சி வட்டாரத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் வீடு வீடாக சென்று பரிசோதனை செய்யப்படுகிறது. நோயாளியின் இருமல், தும்மல் மூலமாக வெளியேறும் பாக்டீரியா காற்றில் பரவி இந்நோய் ஏற்படுகிறது. தோலில் வெளிர்ந்த அல்லது சிவந்த உணர்ச்சியற்ற தேமல், கை கால்களில் மதமதப்பு, நரம்பு தடித்திருத்தல், எண்ணெய் பூசியது போன்ற பளபளப்பான உடல் போன்ற அறிகுறிகள் இருப்பவர்கள், துவக்கத்திலேயே நோயை கண்டறிந்து சிகிச்சை பெறுவதன் மூலம் உடல் ஊனம் ஏற்படாமல் தவிர்க்கலாம்.எனவே பொதுமக்கள் மருத்துவ பரிசோதனை செய்து தொழுநோய் இல்லாத இந்தியா உருவாக்க ஆதரவு தர வேண்டும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை