உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

ரிஷிவந்தியம்; ரிஷிவந்தியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.பாவந்துாரில் உள்ள ரிஷிவந்தியம் அரசு கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சிக்கு தமிழ்த்துறை தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். வணிகவியல் துறைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். ஆண்டுதோறும் ஜன., 30 முதல் பிப்., 15ம் தேதி வரை தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி கல்லுாரி மாணவர்களுக்கு தொழுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பழனிவேல், மருத்துவம் சாரா மேற்பார்வையாளர் சரவணன், சுகாதார ஆய்வாளர் பிரசாந்த் ஆகியோர் தொழுநோயை கண்டறிதல், நோயின் தாக்கம், பாதிப்புகள், ஆரம்ப கால மருத்துவம், கூட்டு மருந்து சிகிச்சை, அரசின் மறுவாழ்வு இல்லங்களில் வழங்கப்படும் தொடர் சிகிச்சை குறித்து விளக்கி பேசி, மாணவ, மாணவிகளின் சந்தேகங்களுக்கு பதிலளித்தனர். அதை தொடர்ந்து, உறுதிமொழி ஏற்கப்பட்டது. நிகழ்ச்சியில் கல்லுாரி பேராசிரியர்கள் ஜெகநாதன், சண்முகம், செல்வராஜ், ரமணி, சுகாசினி, முகேஷ்பிள்ளை உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ