பள்ளிக்கு பெருமை சேர்ப்போம்
இப்பள்ளி மிகவும் பழமையானது. நான் கடந்த 1998- - 99 ஆம் கல்வியாண்டில் 10 ம் வகுப்பு படித்து முடித்தேன். இப்பள்ளி மாணவர்கள், நாட்டுப்புறப் பாடல், நீச்சல் மற்றும் சதுரங்க போட்டிகளில் வட்டார மற்றும் மாவட்ட அளவில் பங்கேற்று பெருமை சேர்த்துள்ளனர். எனவே வரும் காலங்களில் முன்னாள் மாணவர்கள் சார்பில், இப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., மருத்துவம் போன்ற உயர் பதிவிகளில் அதிகப்படியான மாணவர்கள் சேர்ந்து படிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி இந்த பள்ளிக்கு பெருமை சேர்ப்போம். இப்பள்ளியில் படித்த ஏராளமானோர், பல்வேறு துறைகளில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். அந்த வரிசையில் நான் பட்டதாரி ஆசிரியராக பணியில் சேர்ந்து இருப்பது இபள்ளிக்கு கிடைத்த பெருமை மட்டுமல்ல. இது எனக்கு கிடைத்த பெருமையாக கருதுகிறேன். வரும் காலங்களில் பல சாதனையார்களை உருவாக்கக்கூடிய சிறந்த பள்ளியாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. நாராயணசாமி, பட்டதாரி ஆசிரியர், சமூக அறிவியல்.