| ADDED : ஜன 05, 2024 10:16 PM
திருக்கோவிலூர், : திருக்கோவிலூர் அண்ணா நகரில் ரூ.1.92 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நூலகம் மற்றும் அறிவு சார் மையம் திறந்து வைக்கப்பட்டது.திருக்கோவிலூர், அண்ணா நகரில், 6ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் கலைஞர் நகர் புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ. 1.92 கோடி மதிப்பில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கட்டப்பட்டது. இதற்கான திறப்பு விழா நேற்று நடந்தது.சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக அறிவு சார் மையத்தை திறந்து வைத்தார்.தொடர்ந்து நகராட்சி சேர்மன் முருகன், துணைத் சேர்மன் உமாமகேஸ்வரி மற்றும் கவுன்சிலர்கள் நூலகம் மற்றும் அறிவு சார் மையத்தில் ஏற்படுத்தப்பட்டு இருக்கும் நவீன வசதிகளை பார்வையிட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர். ஒப்பந்ததாரர் பாரதி, நகராட்சி ஊழியர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.அரசின் போட்டித் தேர்வு மற்றும் ஜே.இ.இ., நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வு, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட இந்திய ஆட்சிப் பணி தேர்வுகளுக்கான புத்தகங்கள் மற்றும் இன்டர்நெட் கூடிய கம்ப்யூட்டர் வசதியும் ஏற்படுத்தப் பட்டிருப்பதால், மாணவர்களுக்கு பயனளிக்கும்.