உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மது பாட்டில் விற்றவர் கைது

மது பாட்டில் விற்றவர் கைது

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அருகே மது பாட்டில் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.மூங்கில்துறைப்பட்டு அடுத்த அருளம்பாடியில், மூங்கில்துறைப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் சிவன்யா மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை சோதனை செய்ததில், மது பாட்டில் பதுக்கி விற்றது தெரியவந்தது.விசாரணையில் அவர், அதே பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை 57; என தெரிந்தது. உடன் அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்து, மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ