உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சாராய வியாபாரி தடுப்பு காவலில் கைது 

சாராய வியாபாரி தடுப்பு காவலில் கைது 

கள்ளக்குறிச்சி; கள்ளச்சாராய வியாபாரி தடுப்பு காவலில் கைது செய்யப்பட்டார்.கல்வராயன்மலையில் உள்ள வண்டகப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் பிச்சன் மகன் ஜெயராஜ்,38; இவர் மீது கள்ளச்சாராயம் கடத்தல் தொடர்பான பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், அவர் சில வாரங்களுக்கு முன் கள்ளச் சாராயம் விற்ற வழக்கில் கரியாலுார் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இவரது தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு எஸ்.பி., ரஜத்சதுர்வேதி பரிந்துரையை ஏற்று ஜெயராஜை தடுப்பு காவலில் ஓராண்டு சிறையில் அடைக்க கலெக்டர் பிரசாந்த் உத்தரவிட்டார்.இந்த உத்தரவு நகலை, கடலுார் மத்திய சிறையில் உள்ள ஜெயராஜியிடம், கரியாலுார் போலீசார் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி