உள்ளூர் செய்திகள்

மது விற்றவர் கைது

தியாகதுருகம், : தியாகதுருகம் அருகே மது பாட்டில் விற்றவரை போலீசார் கைது செய்தனர். தியாகதுருகம் அடுத்த சூளாங்குறிச்சி பகுதியில் இன்ஸ்பெக்டர் மலர்விழி ரோந்து சென்றார். அப்போது ஏரிக்கரையில் கள்ளத்தனமாக மது பாட்டில் விற்றுக் கொண்டிருந்த கள்ளக்குறிச்சி சக்தி நகரைச் சேர்ந்த ராஜா மகன் கவியரசன், 31; என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 20 குவாட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !