எழுத்தறிவு திட்ட பயிற்சி முகாம்
சங்கராபுரம் : சங்கராபுரத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வலர்களுக்கு ஒரு நாள் பயிற்சி நடந்தது. கள்ளக்குறிச்சி மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சார்பில் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கத்தின் மூலம் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 1,723 கற்போர் மையங்களில், 1,723 தன்னார்வலர்கள் மூலம் 31,270 கற்போர் எழுத்தறிவு பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் 9 ஒன்றியங்களில் 31,270 பேருக்கு அடிப்படை எழுத்தறிவு, எண்ணறிவு கற்பிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. சங்கராபுரம் வட்டார வளமையத்தில் நேற்று நடந்த பயிற்சியை மாநில இணை இயக்குநர் பொன்குமார் துவக்கி வைத்து பேசினார். நிகழ்ச்சியில் சி.இ.ஓ., கார்த்திகா, மாவட்ட கல்வி அலுவலர்கள் வேணுகோபால், ஜோதிமணி, விஷ்ணுமூர்த்தி, மாவட்ட உதவி திட்ட அலுவலர் மணி, ஒருங்கிணைப்பாளர் திருமுருகன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் கவிதா மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள் பங்கேற்றனர்.