உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  வாழ்வாதார இயக்க பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்

 வாழ்வாதார இயக்க பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்க அனைத்து பணியாளர்கள் சங்க கூட்டமைப்பினர் 5வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சியில் நடந்த வேலைநிறுத்த போராட்டத்திற்கு வட்டார இயக்க மேலாளர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ரவி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்க பணியாளர்களுக்கு அடிப்படை ஊதிய உயர்வு வழங்குதல், பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மாவட்ட அலுவலகத்தில் இருந்து பணியாளர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக அனுப்புதல், பெண் பணியாளர்களுக்கு ஊதியத்துடன் மகப்பேறு விடுப்பு வழங்குதல் உட்பட 14 கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 6ம் தேதியில் இருந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 5வது நாளாக நேற்றும் போராட்டம் நடந்தது. மாநில இணைச்செயலாளர் தீபா, வட்டார மேலாளர்கள் ஹேமலதா, சுகந்தி, சமுதாய ஒருங்கிணைப்பாளர், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், வட்டார இயக்க மேலாளர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை