உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / முதியவரை தாக்கியவர் கைது

முதியவரை தாக்கியவர் கைது

கச்சிராயபாளையம்; எலியத்துார் கிராமத்தில் முதியவரை தாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர்.கச்சிராயபாளையம் அடுத்த எலியத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள், 65; இவருக்கும் எதிர் வீட்டைச் சேர்ந்த கருணாகரன் மனைவி பெரியநாயகம் என்பவருக்கும் முன்விரோதம் இருந்தது.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் பெரியநாயகத்திற்கு ஆதரவாக தெங்கியாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த துரை, 42, என்பவர் தாக்கியதில் பெருமாள் படுகாயமடைந்தார்.இது குறித்த புகாரின் பேரில், கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து துரையை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை