உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மது பாட்டில் விற்ற நபர் கைது

மது பாட்டில் விற்ற நபர் கைது

கச்சிராயபாளையம் : கச்சிராயபாளையம் அருகே மது பாட்டில் விற்பனை செய்த நபரை போலீசார் நேற்று கைது செய்தனர். கச்சிராயபாளையம் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ராமர் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் அம்மாபேட்டை பகுதியில் ரோந்து சென்றார். அம்மாபேட்டை பஸ் நிறுத்தம் அருகே ஸ்கூட்டரில் மது பாட்டில்கள் விற்பனை செய்த எடுத்துவாய்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த நடராஜன் மகன் ராஜேஷ்குமார், 40; என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 35 மது பாட்டில்கள் மற்றும் ஸ்கூட்டரை போலீசார் பறிமுதல் செய்த விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ