மேலும் செய்திகள்
குட்கா விற்றவர் கைது
10-Dec-2024
கள்ளக்குறிச்சி: வரஞ்சரம் அருகே பூனையை சுட்டு கொன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.வரஞ்சரம் அடுத்த முடியனுார் கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி மகன் பழனிசாமி,65; இவர், தனது குச்சிக்காட்டில் கருப்பு நிற பூனையை வளர்த்துள்ளார். கடந்த 19ம் தேதி நீலமங்கலம் நரிகுறவர் காலனியை சேர்ந்த குப்பன் மகன் பாண்டியன்,68; என்பவர் பழனிசாமியின் பூனையை துப்பாக்கியால் சுட்டு எடுத்து சென்றுள்ளார். பழனிசாமி புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து, பாண்டியனை கைது செய்தனர். அவரிடமிருந்த ஒற்றைக்குழல் நாட்டு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.
10-Dec-2024