மேலும் செய்திகள்
நாட்டு துப்பாக்கியுடன் வேட்டைக்கு சென்றவர் கைது
02-Jul-2025
சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே பட்டா மாற்றம் தொடர்பாக வி.ஏ.ஓ.,வை மிரட்டிய நபரை போலீசார் கைது செய்தனர். சங்கராபுரம் அடுத்த கொசப்பாடி கிராமத்தைச் சேர்ந்த குணசேகரன் மகன் செம்பராமன், 45; கடந்த 6 மாதத்திற்கு முன்பு அதே பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் நத்தம் 3 சென்ட் இடத்தினை, தனது பெயருக்கு பட்டா மாற்றம் செய்து தருமாறு, கிராம நிர்வாக அலுவலர் ராஜ்குமார், 32; என்பரிடம் தெரிவித்தார். இது தொடர்பாக அடிக்கடி வி.ஏ.ஓ, அலுவலகம் வந்து ஆபாசமாக திட்டி வந்தார். கடந்த 24ம் தேதி வி.ஏ.ஓ., ராஜ்குமார் அலுவலகத்தில் பணியில் இருந்தார். பகல் 12:00 மணிக்கு அலுவலகம் வந்த செம்பராமன், வி.ஏ.ஓ., ராஜ்குமாரை திட்டி பணி செய்ய விடாமல் தடுத்து மிரட்டினார். இது குறித்து வி.ஏ.ஓ., ராஜ்குமார் அளித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிந்து செம்பராமனை கைது செய்தனர்.
02-Jul-2025