மேலும் செய்திகள்
சாலை விபத்தில் முதியவர் பலி
16-Jul-2025
கள்ளக்குறிச்சி: புக்கிரவாரியில் மதுபோதையில் பருத்தி மருந்து குடித்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கள்ளக்குறிச்சி அடுத்த கலையநல்லுாரை சேர்ந்தவர் சக்கரை, 75; இவர், கடந்த சில தினங்களுக்கு முன் புக்கிரவாரியில் உள்ள மகள் வீட்டில் தங்கியிருந்தார். கடந்த 3ம் தேதி மதுபோதையில் இருந்த சக்கரை பருத்தி மருந்தினை குடித்தார். தகவலறிந்த அவரது குடும்பத்தினர் சக்கரையை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளித்து, மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சக்கரை நேற்று முன்தினம் உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் கீழ்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
16-Jul-2025