உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மனு கொடுக்க வந்தவர் தற்கொலை முயற்சி: கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

மனு கொடுக்க வந்தவர் தற்கொலை முயற்சி: கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் சொத்துகளை கிரய ஆவணப்படி உட்பிரிவு செய்து, தனிப்பட்டாவாக மாற்ற வலியுறுத்தி மனு அளிக்க வந்த நபர் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த நபர் ஒருவர் திடீரென தனக்கு தானே பெட்ரோல் ஊற்றி, தற்கொலைக்கு முயன்றார். உடன், பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி, தண்ணீரை ஊற்றி விசாரித்தனர். அதில், மல்லாபுரம் கிராமத்தை சேர்ந்த தர்மலிங்கம் என்பது தெரிந்தது. இவர், அளித்த மனு: மல்லாபுரம் கிராம எல்லையில் வெவ்வேறு புல எண்களில் என் பெயரில் (தர்மலிங்கம்) நிலம் உள்ளது. இந்த இடங்களை உட்பிரிவு செய்து, தனிப்பட்டாவாக மாற்றம் செய்யக்கோரி ஆன்லைன் மூலமாக உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பதிவு செய்துள்ளார். மேலும், சங்கராபுரம் தாசில்தாரிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும், என நிலத்திற்கு அருகே உள்ள ஒருவர், மீட்டர் பெட்டியை உடைத்து, அரை சென்ட் பரப்பளவு கொண்ட இடத்தை ஆக்கிரமித்துள்ளார். எனவே, சொத்துக்களை கிரய ஆவணப்படி உட்பிரிவு செய்து, தனிப்பட்டாவாக மாற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி