உள்ளூர் செய்திகள்

மண்டலாபிேஷக நிறைவு

சங்கராபுரம்: விரியூர் கிராமத்தில் ஒரே வளாகத்தில் செல்வ விநாயகர், ராதா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி, மகா மாரியம்மன் மற்றும் ஏரிக்கரை பூரண புஷ்கலா சமேத அய்யனார் ஆகிய 4 சன்னதிகள் புனரமைக்கப்பட்டு கடந்த பிப்ரவரி மாதம் 10ம் தேதி கும்பாபிேஷக விழா நடந்தது. அதனைத் தொடர்ந்து 48 நாட்கள் மண்டலாபிேஷக பூஜை நடந்தது.நேற்று மண்டலாபிேஷக நிறைவு நாளையொட்டி, சுவாமிகளுக்கு விேஷச அபிேஷக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து, கணபதி, லட்சுமி, நவக்கிரக ேஹாமம், யாக வேள்வி பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.ஏற்பாடுகளை விழாக் குழுவிணர் மற்றும் ஊர் பொது மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ