உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கொடியேற்றம்

மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கொடியேற்றம்

சங்கராபுரம்; சங்கராபுரம் அருகே, தேர் திருவிழாவையொட்டி, கொடியேற்று விழா நடந்தது. சங்கராபுரம் அடுத்த பூட்டை கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும், ஆடி மாதத்தில், மூன்று நாட்களுக்கு தேர் திருவிழா நடக்கிறது. இதில் சுற்று வட்டாரத்திலிருந்து 30 கிராமங்களைச் சேர்ந்த, ஏராளமானோர் பங்கேற்று வருகின்றனர். இந்நிலையில், இந்தாண்டிற்கான தேர் திருவிழா வரும் ஆக.,9ம் தேதி நடக்கிறது. இதையொட்டி கோவிலில் நேற்று கொடியேற்று விழா நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிேஷகம் மற்றும் ஆராதனை நடந்தது. இதில் ஊராட்சி தலைவர் ஜீவா கொளஞ்சியப்பன், முன்னாள் தலைவர் கந்தசாமி, செம்பராம்பட்டு ஊராட்சி தலைவர் வைத்தியநாதன், அறங்காவலர் குழு தலைவர் ஆறுமுகம், பன்னீர்செல்வம், ராஜா, துணைத்தலைவர் பச்சமுத்து, குமரேசன், அருணாசலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி