மழை, வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு மா.செ., ஆறுதல்
திருக்கோவிலுார்; கள்ளக்குறிச்சி பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் குமரகுரு பார்வையிட்டு ஆறுதல் கூறினார். திருக்கோவிலுார் அடுத்த மணம்பூண்டி, தேவனுார், அரகண்டநல்லுார் பகுதிகள் வெள்ளத்தால் பெருமளவில் பாதிக்கப்பட்டது. பாதித்த மக்களை அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் குமரகுரு, ஒன்றிய செயலாளர் பழனிசாமி ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு உள்ளிட்ட நிவாரணம் வழங்கினர். எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் விநாயகமூர்த்தி, நகர செயலாளர் சுப்பு, மாவட்ட பொருளாளர் ராமச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் சேகர், சந்தோஷ், முன்னாள் நகர செயலாளர் இளவரசன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் சதீஷ், மாணவர் அணி தலைவர் பார்த்திபன், ஜெ., பேரவை இணை செயலாளர் சுபாஷ், மாவட்ட வழக்கறிஞர் அணி பிரிவு செயலாளர் ஆதன் ரவி, மாணவர் அணி துணை செயலாளர் முருகன் உடனிருந்தனர்.